பாகற்காய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள்- Bitter Gourd Medicinal uses while using to our body

 பாகற்காய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் தெரியுமா?

👉பாகற்காய் நன்மைகள்:::
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட மறுக்கும் ஒரு காய்கறி உண்டென்றால் அது பாகற்காய் தான். ஏனெனில பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. பாகற்காய் தருகின்ற சத்துகளை பற்றி தெரிந்து கொண்டால் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டோம்.
பாகற்காயில் பல வகைகள் உண்டு. அனால் இரண்டு வகை பாகற்காய்களையே உற்பத்தி செய்கின்றனர். ஒன்று குட்டையானது மற்றொன்று நீளமானது. குடையானது மிதி / குருவித்தலை பாகற்காய் என்றும், நீளமானது கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கபடுகிறது. பாகற்காயானது பாகல் என்றும் பாவக்காய் என்றும் அழைக்கபடுகிறது.
பாகற்காயில் பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இருக்கிறது. இது நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். அதே போல வாழைப்பழத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்குப் பொட்டாசியம் அத்தியாவசியமாகும்.
புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் பாகற்காயில் உண்டு. இந்த பீட்டா கரோட்டின்தான், நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது. இது நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது.
மேலும் பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
👉பாகற்காயின் மருத்துவப் பயன்கள்:::
1. பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
2. கணைய உண்டாகும் புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
3. பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும்.
4. பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
5. பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
6. பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
7. பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.
8. பாகற்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும்.
9. பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.
Do you know the medical benefits and medical benefits of eating gourd to our body???
👉 Benefits of Gourd :::
If there is a vegetable that refuses to eat from children to adults, it is gourd. Because no one likes the bitterness of gourd more. But the nutrients in it have many benefits to the body. If we know the sounds of gourd, we will not say no to it.
There are many varieties of gourd. But only two types of gourd are produced. One short the other long. The umbrella is called stamp / sparrow gourd and the longest is called horned gourd. Gourd is known as Pagal and Pavakkai.
Gourd contains twice the calcium than the spinach. It will help our bone, tooth growth. Similarly, a banana has twice the potassium. Potassium is essential for muscle strength, nervous system function, heart health.
Beta carotine gourd contains twice as much as broccoli. This is beta carotine that is converted into vitamin A inside our body. It's good for our eyes, skin etc.
Also gourd is rich in flavonoids like vitamin A, B, C, beta-carotine, lutein, iron, zinc, potassium, mango, magnesium.
👉Medical benefits of gourd :::
1. Gourd Extract is used as a best medicine to fight Type 2 Diabetes.
2. Playing a key role in destroying pancreatic cancer cells.
3. Boiled gourd or its leaves in hot water and eaten daily, the body's immunity will increase. And will eliminate the intestines.
4. Vitamin C and antioxidants in gourd, protects eyes from damage.
Polypeptide-B chemical in 5. gourd works as insulin and reduces blood sugar levels.
6. Gourd is high in fiber, helps digestion. Removes toxins from the body and purifies the blood.
7. Gourd kills insects in food bag. Appetizer, quenching the craziness.
8. Gourd will help women who have a baby to eat more breastfeeding.
9. If you add gourd frequently in food, cough, gastrointestinal worms will be cured.



 

Comments

Popular posts from this blog

Siddhi Tharum Siddhargal|Part 1| 27 stars born persons need to pray which Siddhar by So. So. Meenakshi Sundaram Religious Discourse- Makkal TV